2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உத்தியோகத்தர்களுக்கு புதிய இடமாற்றங்கள்

Princiya Dixci   / 2017 ஜனவரி 04 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய முருகுப்பிள்ளை கோமலேஸ்வரன், வவுணதீவு பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தராக, நேற்றுப்  புதன்கிழமை (04) தொடக்கம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.

வவுணதீவு பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றிய வி.அரியராஜா, செங்கலடி பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
அத்துடன், காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.மக்பூல், ஏறாவூர் பிரதேச செயலகத்துக்கும், காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றிய திருமதி சனூனா நவாஸ், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு கடந்த 1ஆம் திகதி தொடக்கம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை, காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றிய ஏ.எல்.பசீர் அகமட், கடந்த 1ஆம் திகதி தொடக்கம் ஓய்வு பெற்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X