2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிப்பட்டறை

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய உரச் செயலகத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சின் கமநல அபிவிருத்தித் திணைக்களங்களில் இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான முழு நாள் பயிற்சிப்பட்டறையொன்று, சத்தூக்கொண்டானிலுள்ள விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று (15) நடைபெற்றது.

தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில், உரச் சட்டமூலம், விவசாயக் காப்புறுதியின் முக்கியத்துவம், சேதன திரவ பசளையின் பயன்பாடு, மாவட்ட நீர்ப்பாசனப் பொறிமுறை, சேதனப் பசளையின் முக்கியத்துவம், தேசிய உரச் செயலகத்தின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயப்பரப்புகள் குறித்து துறைசார் வல்லுநர்களால் விளக்கமளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .