2025 மே 08, வியாழக்கிழமை

உன்னிச்சைக்குளத்தை அண்டிய கிராமங்களுக்கு குடிநீர்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சைக்குளத்தை அண்டியுள்ள கிராமங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுமென நீர்வழங்கல்; மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரப் பகுதிக்கு மாத்திரமே உன்னிச்சைக்குளத்தின் மூலமாக தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது.

உன்னிச்சைக்குளக்கட்டின் உயரத்தை இன்னும் 02 அங்குலத்துக்கு உயர்த்தினால், அக்;குளத்தைச் சூழவுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட  நீர் விநியோகிக்க முடியும். இத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படுமெனவும் இன்று புதன்கிழமை அவர் கூறினார்.

உன்னிச்சை நீர்வழங்கல் திட்டம் சம்பந்தமாக உன்னிச்சைக்குளத்துக்கு அருகிலுள்ள கிராமங்களுக்கு நீர் விநியோகிக்கப்பட மாட்டாதென்று  எவரும் அச்சமடையத் தேவையில்லை. இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை (07) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நீர் வழங்கல் வடிகாலமைப்புத்துறை அமைச்சு சம்பந்தமான குழு நிலை விவாதத்தின்போதும் தான் விளக்கமளித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

உன்னிச்சைக்குளத்தின் நீர் விநியோகத்திட்டம் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்க் கிராமங்களுக்கு நீர் விநியோகம் இடம்பெறுமா என்ற வகையில் சந்தேகம்  வெளியிட்டிருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X