Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 01 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் உப உணவுகளை செய்கை பண்ணுவதில் கவனம் செலுத்துமாறு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் கோரளைப்பற்று வடக்குப் பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற சிறுபோகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டத்தின்போதே, இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் கோரளைப்பற்று வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவுக்குளம், மதுரங்கேணிக்குளம், கிரிமிச்சைக்குளம் மற்றும் சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான சிறுபோகச் செய்கைக்குரிய வேலைகளை அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோரளைப்பற்று வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவைப் பொறுத்தவரையில் கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரையாக நாகம்பூமலை, வாகையடிவட்டை ஆகிய பிரதேசங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
கடந்த வருட பெரும்போகச் செய்கையின்போது, கபிலநிறத்தத்தியின்; தாக்கம் அதிகம் இருந்தமைக்கு பல காரணங்கள் காணப்பட்டன. ஆனால், இம்முறை இவற்றை தவிர்க்கும் வகையில் விவசாயிகள் மிகக் கவனத்துடன் செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
விதைப்புக்கான ஆரம்பத் திகதியை தீர்மானித்தல், காவல், வேலி அமைத்தல், வேலை ஆட்களுக்கான கூலி, அறுவடை, அறுவடைக்கான கூலி உள்ளட்டவை தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago