Suganthini Ratnam / 2016 மே 10 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
விசேட செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் க.பொ.த. உயர்தர கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்தியக் காரியாலயம் தெரிவித்தது.
இதன்படி க.பொ.த. உயர்தர கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக விசேட செயற்றிட்ட வகுப்புகள் ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.
2016, 2017 க.பொ.த. உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளில் தேசியப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மேற்படி வலய மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்து மருத்துவம், பொறியியல் மற்றும் அதனோடு இணைந்த ஏனைய பிரிவுகளுக்கும் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மாணவர்களின் தொகையை அதிகரிக்கும் நோக்கில் இந்தச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் இணைப்பாளர் ஏ.அப்துல் நாஸர் கூறினார்.

52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago