2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சைக்கிளோட்ட விழிப்புணர்வு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) 

எரிபொருள் பிரச்சினையை மையப்படுத்தி பாடசாலைக்கு ஆசிரியர்களையும், மாணவர்களையும் வரவழைத்தல் எனும் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மற்றும் மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தரப் பெண்கள் பாடசாலைகளில் கல்வி பயிலும் 2021-2022 ஆண்டுக்கான உயர்தர மாணவர் தலைவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிளோட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் தலைமையிலான நிர்வாகமும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் , வின்சன்ட் உயர்தரப் பெண்கள் பாடசாலையின் அதிபர் தலைமையிலான நிர்வாகத்தினர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் அனுசரணையுடன் விழிப்பூட்டும் சைக்கிளோட்டம் கடந்த திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இச்சைக்கிளோட்டம் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் நுழைவாயிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு திருமலை வீதியில் கோப்பின் தனியார் விடுதிவரையும் சென்று அங்கிருந்து மீண்டும் பிரதான வீதி வழியாக வந்தடைந்து  ரெலிகொம் வீதியூடாக ஜீ.வீ தனியார் வைத்தியசாலை வரையும் சென்று மீண்டும் பிரதான வீதி வழியாக பாடசாலையில் குறித்த சைக்கிளோட்டம் நிறைவடைந்தது.

இவ்விழிப்புணர்வு சைக்கிளோட்டத்தில் 100 இற்கு மேற்பட்ட உயர்தர மாணவர்கள், சாரண மாணவர்கள், ஆசிரியர்கள் பங்குபற்றியுள்ளனர்.

இவ்விழிப்புணர்வு சைக்கிளோட்ட ஆரம்பநிகழ்வில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இராதுரை பாஸ்கர், பிரதி அதிபர் எஸ்.நந்தகோபால், வின்சென்ட் உயர்தரப் பெண்கள் பாடசாலையின் அதிபர் திருமதி. தவத்திருமகள் உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கலூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்  வை.கோபிநாத், பழைய மாணவர் சங்க தலைவர் எஸ்.பகீரதன், வின்சென்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தலைவி திருமதி.தர்சினி சுந்தரநேசன், சாரண குழுத்தலைவர் எம்.சந்திரன், பொறியியலாளர் என்.திருவருட்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

இச்சைக்கிளோட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு எஸ்.எல்.ரீ.மொபிட்டல் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வால் பாடாசாலைக்கு துவிச்சக்கரவண்டியில் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் வரவு அதிகரிக்கப்படலாம் என பாடசாலைகளின் அதிபர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .