2025 மே 08, வியாழக்கிழமை

உயிரிழந்த நிலையில் யானை மீட்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 17 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்.

மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் முள்ளிவட்டுவான் பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று இன்று காண்டுபிடிக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசி ஒருவர்   வாழைச்சேனை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து கிரண் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யானை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும்  இது தொடர்பான அறிக்கையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய பின்னரே யானை எதனால் மரணமடைந்துள்ளது என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X