2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

உயிர்த்த ஞாயிறு சம்பவம்; காத்தான்குடியில் வான் மீட்பு

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலிலுள்ள நபரொருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வான், மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து, புதிய காத்தான்குடி, றிஸ்வி நகரில் வைத்து வெள்ளிக்கிழமை (16) இரவு மீட்கப்பட்டுள்ளது. 

வாகனத்தை மீட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில், 2019 ஏப்ரல் 25ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, மொணராகலை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் பெயரில் இந்த வான் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த வாகனம், காத்தான்குடியில் இருந்து நுவரெலியா பயிற்சி முகாமுக்கு பயிற்சியாளர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக, மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.  

அதேவேளை, வாகனத்தை செலுத்திய சாரதியொருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .