Suganthini Ratnam / 2016 ஜூலை 06 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
விவசாயிகளின் நலன் கருதி கடந்த மே மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட உரமானியத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் உரமானியத்தை பெற்றுக்கொள்ளாத விவசாயிகளுக்கு இம்மாதம் 15ஆம் திகதிக்கிடையில் உரமானியம் வழங்;;;;குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தெரிவித்தார்.
ஒரு ஏக்கர் நெல் விவசாயத்துக்கு 5,000 ரூபாயை அரசாங்கம் உரமானியமாக வழங்குகின்றது. ஆகக் கூடியது விவசாயி ஒருவருக்கு 05 ஏக்கருக்கு மாத்திரமே உரமானியம் வழங்கப்படும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தச் சிறுபோகத்தில் மொத்தம் 52 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கைக்கு உரமானியம் வழங்கப்படுகின்றது. இம்மாவட்டத்தில் இதுவரையில் 20,800 விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உரமானியம் கிடைக்காத சுமார் 700 விவசாயிகளுக்கு உரமானியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
உன்னிச்சைக்குளத்து நீர்ப்பாசனத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இதுவரையில் உரமானியம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் கேட்டபோதே, பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் இதனைக் கூறினார்.
உன்னிச்சைக்குளத்து நீர்ப்பாசனத்தை நம்பி நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள ஆயித்தியமலை கமநல அபிவிருத்தி அலுவலகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நெற்காணிகளுக்கு இதுவரையில் உரமானியம் கிடைக்கவில்லை என உன்னிச்சைக்குள விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே.யோகவேள் தெரிவித்தார்.
மேற்படி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள குறைந்தபட்சம் ஒரு வாரத்திலாவது இவ்விவசாயிகளுக்கு உரமானியம கிடைத்திருக்க வேண்டும். ஆயினும், இவ்விவசாயிகள் கடன்பட்டு உரத்தை கொள்வனவு செய்துள்ளனர். தற்போது நெல் அறுவடை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்ற வேளையில் இரண்டரை மாதங்களாகியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு உரமானியம் கிடைக்கவில்லை.
இந்த உரமானியம் விதைப்புக்கு முன்னரே வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இந்த உரமானியம் இனி தமக்குக் கிடைக்காமல் போகுமோ என்ற கவலையுடன் விவசாயிகள் உள்ளனர் எனவும் அவர் கூறினார்.
22 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
9 hours ago