2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘உரிமைகளை வென்றெடுப்போம்’

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் உருவாகப்பட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியால், “அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை மீறுகின்றது - உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவோம்”  எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுரங்கள், மட்டக்களப்பு பொதுச் சந்தைச் சதுக்கத்தில், நேற்று (01) விநியோகிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் சுந்தரேசன் தலைமையில், விநியோகிக்கப்பட்ட இந்தத் துண்டுப்பிரசுரங்களில், அதிகரிக்கப்பட்ட பொருள்களின் விலைகளைக் குறைக்குமாறும் மக்களுக்கு வழங்குவதாகக் கூறிய நிவாரணங்களை வழங்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், துண்டிக்கப்பட்ட ஓய்வூதியச் சம்பளத்தை உடனடியாக வழங்கும்படியும் தோட்டத் தொழிலாளிகளின் சம்பளம் உள்ளிட்ட சம்பள அதிகரிப்பையும் வழங்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தகுதிக்கேற்றவாறு, பட்டதாரிகள் உள்ளிட்ட தொழில் இல்லாத அனைவருக்கும் தொழில் வழங்குமாறும் முக்களின் உரிமை மீது கைவைக்க வேண்டாம் என்றும்  மக்களின் சொத்துகளைச்  சூறையாடிய பிணைமுறி மோசடிக்காரர் உள்ளிட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கும்படியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், உரிமைகளை வென்றெடுப்பதற்காகக் கைகோர்த்துக் கொள்வோம் என்றும் ஒன்றாக எழுந்து நின்று போராடுவோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .