Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 23 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு கிராமசேவகர் பிரிவில் உருக்குலைந்த நிலையில் இனந்தெரியாத ஆணின் சடலமொன்று, இன்று (23) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
நாசிவந்தீவு, கட்டுமுறிவு பாலத்தின் வாவிக்கரையில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர், வாவிக்கரை கண்ணாக் காட்டுப் பகுதியில் இருந்து துர்நாற்றாம் வீசுவதை அறிந்து குறித்த இடத்துக்குச் சென்று பார்வையிட்ட போது, ஆணின் சடலம் கிடப்பதைக் கண்டு, பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
சடலத்துக்கு அருகில் இரண்டு அலைபேசிகளும் பொதியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago