Princiya Dixci / 2022 ஜூலை 27 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள இலப்படிச்சேனை காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம், நேற்று முன்தினம் (25) இரவு மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டுக்கு விறகு வெட்டச் சென்றவர்கள், அங்கு சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் 10 நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்த கரடியனாறு பொலிஸார், குறித்த சடலம் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago