2025 மே 10, சனிக்கிழமை

உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் கிளைகளின் உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன்,  நேற்று மாலை   விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொ.கனகசபை, பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள், கட்சிக் கிளைகளின் உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது கட்சியின் செயற்பாடுகள், தலைமைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள், மாவட்டத்தின் அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் பாரபட்சம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X