2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

உலமாக்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 26 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளையும் சேர்ந்த உலமாக்களுக்கான செயலமர்வு, எதிர்வரும் 30ஆம் 31ஆம் திகதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணிவரை காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள அல்மனார் அல்ராசித் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத் தலைவரும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டிலும்; மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் ஏற்பாட்டிலும் நடைபெறவுள்ள இந்தச் செயலமர்வில், சுமார் 300 உலமாக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தச் செயலமர்வு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது தெரிவித்த சிறிலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் செயலாளர் அஸ்ஸெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் 'உலமாக்களை வலுவூட்டி அவர்களின் திறன் விருத்தியை விருத்தி செய்யும் நோக்குடன் இந்தச் செயலமர்வு நடத்தப்படுகின்றது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X