2025 மே 02, வெள்ளிக்கிழமை

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 மே 25 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு - வவுணதீவு, கண்ணகிபுரம், பாவற்கொடிச்சேனை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவரை, நேற்று (24) இரவு விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதுடன், துப்பாக்கியொன்றையும் மீட்டுள்ளனரென, வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, குறித்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது, உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒருவரை கைதுசெய்ததுடன், துப்பாக்கியை மீட்டு, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, வவுணதீவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X