2025 மே 02, வெள்ளிக்கிழமை

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி சிக்கினார்

Princiya Dixci   / 2021 மார்ச் 22 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, வவுணதீவு  பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் பகுதியில் உள்ளூர் துப்பாக்கியொன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த விவசாயி ஒருவரை, நேற்று (21) மாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசந்த அப்புகாமி தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்

இதன்போது, வீட்டின் வெளிப்பகுதியிலுள்ள மரங்களுக்கிடையில் பொலித்தீனால் சுற்றி மறைத்து வைத்திருந்த நிலையில்  துப்பாக்கியை மீட்டதுடன், 42 வயதுடைய விவசாயியையும் கைது செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .