2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஊடக அடக்குமுறைக்கு எதிராக கண்டனம்

Princiya Dixci   / 2022 ஜூலை 11 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கையில் இடம்பெறும் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கிழக்கு மாகாணத் தழிழ் ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா, இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 09ஆம் திகதியன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வாஸஸ்தலம் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட சந்தர்ப்பத்தில், மக்களுக்கு தகவல்களை வெளிக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்ட முயற்சி பொலிஸாராலும் விசேட அதிரடிப் படையினராலும் தடுக்கப்பட்டு, அவர்கள் படுமோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இவை ஊடக சுதந்திரத்துக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் மட்டுமல்ல, ஊடகவியலாhளர்களை அச்சுறுத்தும் மனித உரிமை மீறலாகவும் நாம் காண்கின்றோம்.

மக்களின் தகவல் அறியும் உரிமைகளைக் கேள்விக் குறியாக்கும் நோக்குடன் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட இதுபோன்ற மிலேச்சத்தனமான அடக்குமுறையை ஒரு சுயாதீன ஆசிரியர் சங்கம் என்ற வகையில், கிழக்கு மாகாணத் தழிழ் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X