Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திர ஊடக கண்காணிப்பு மய்யம் ஏற்பாடு செய்துள்ள கிழக்கு மாகாண ஆசிரியர்கள், உயர்தர மாணவர்கள், ஆர்வலர்களுக்கான தமிழ் மொழி மூல ஊடக அறிமுகச் செயலமர்வு, இம்மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு - ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 06 மணிவரை நடைபெறவுள்ளது.
காலை ஆரம்ப அமர்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதமஅதிதியாகக் கலந்துகொள்வார்.
இதேவேளை, 23ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அட்டாளச்சேனைப் பள்ளிவாசல் கலாசாரமண்டபத்தில் காலை 8.30 முதல் மாலை 06 மணிவரை நடைபெறவுள்ள இறுதி அமர்வில் வட மத்திய மாகாண ஆளுநர் திஸ்ஸ விதாரண பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
இவ்விரு ஊடகசெயலமர்வுகளையும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகரும், செய்தி ஆய்வாளருமான எம்.நௌஷாட் மொஹிடீன் நடத்திவைப்பார் என, சுதந்திர ஊடக கண்காணிப்பு மய்யம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
42 minute ago