Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2016 ஜனவரி 27 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
ஊடகவியலாளர்கள் மக்களின் நன்மைகளுக்காக பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊடகவியலாளர்களோடு இணைந்து சிவில் சமூகத்தினர் செயல்பட்டால் மக்களின் பிரச்சினைகளைகளை மெனம்மேலும் வெளிக்கொண்டு வரமுடியும் என்று, உடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி தெரிவித்துள்ளார்
அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளையும் ஊடகவியலாளர்களுக்கிடையேயன ஒத்துழைப்பையும், புரிந்துணைர்வையும், உருவாக்கும் நோக்குடன், கடந்த திங்கட்கிழமை (25) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹொட்டலில் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
'தகவலை அறிவதற்கான சட்டவரைவு தொடர்பாக மக்களைத் தெளிவு படுத்தும் செயற்றிட்டம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது. மேலும் இவ்வாறான கலந்துரையாடல்கள் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஊடகவியலாளர்களுக்கு, சமூகத்தில் விசேடமான பொறுப்பு உள்ளது. இந்நிலையில் ஊடகவியலாளர்கள் அவர்களது பொறுப்புகளை செய்வதில் பின்னிற்கக்கூடாது.
வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் ஊடகவியலாளர்களிடமிருந்து பல விடயங்களை எதிர்பார்க்கின்றனர்.
அவ்வாறான விடயங்களை ஊடகவியலாளர்கள் வெளிக்கொண்டு வர வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டார்.
'யுத்தகாலத்தில் மக்களுக்காக கடமையாற்றிய அரச சார்ப்பற்ற அமைப்புக்கள் பற்றி, அப்போதிருந்த அரசாங்கம் எதிர் மறையான கருத்துக்களை விடுத்திருந்தனர். எனவே எதிர் காலத்தில் சிவில் அமைப்புக்களும், ஊடகவியலாளர்களும் இணைந்து ஒரு கட்டமைக்கப்பட்ட பரிந்துரைகளைத் தெரிவித்தால், அவை பாரியளவிலான வரவேற்புக்களை பெறும்' என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago