2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென அறிவுரை

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி அறிவுரை வழங்கினார்.

ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்கள் அறுவரும் புதன்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவை ஒக்டோபர் 19ஆம் திகதி வரை நீடித்த பின்னர் நீதிபதி நீதிமன்றத்தில் வைத்து சில நிமிடம் ஊடகவியலாளர்களுக்காக அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து அங்கு அவர் கூறும்போதுளூ இந்த வழக்கு விசாரணையை முன்கொண்டு செல்வதற்கு ஊடகவியலாளர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் இருந்து தமது ஊடகப் பணியை ஆற்ற வேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை முன்னெடுப்பதற்குக் எந்த வகையிலும் ஊடகவியலாளர்கள் குந்தகமாக இருந்து கொள்ளக் கூடாது என்று வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

பல ஊடகங்கள் மற்றும் முகப் புத்தகங்கள் வாயிலாக மிகவும் தவறான, உண்மைக்குப் புறம்பான  மற்றும் முரணான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது வருத்தமளிக்கிறது.

அவ்வாறு உண்மைக்குப் புறம்பாக வெளிவரும் தகவல்களைப் பரப்புவதால் வீண் குழப்பங்கள் ஏற்படும்.
இவர்தான் குற்றவாளியென்று குறித்துக் காட்டும் வண்ணம் தகவல்கள் பரப்பப்படுவது தவறாகும். சந்தேக நபர்களை குற்றவாளிகள் என்று ஒருபோதும் அடையாளப்படுத்தக் கூடாது.

உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்கான பிரயத்தனங்களில் நீதிமன்றமும் பொலிஸாரும் பொதுமக்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றபோது ஊடகவியலாளர்கள் இந்த முயற்சிக்கு இடைஞ்சலாக இருந்து விடக் கூடாது.
நீதிமன்றத்தில் நடக்கும் விடயங்களை மாத்திரம் திரிபுபடுத்தாமல் செய்தி வெளியிட வேண்டும்.

மெருகூட்டி, கற்பனை செய்து எழுதி செய்தியைப் பரப்புவது நீதிமன்ற நடவடிக்கைகளை திசை திருப்பக் கூடும்.
நீதிபதியின் பெயர், வகிக்கும் பதவி என்பனவற்றைக் கூட துல்லியமாக வெளிப்படுத்தத் தெரியாத வகையில் ஊடகவியலாளர்கள் ஒரு சிலர் இருப்பது ஆரோக்கியமானதல்ல. சரியான விவரங்களை நீதிமன்றப் பதிவாளர், பொலிஸார் ஆகியோரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்

கடந்த 23.09.2016 அன்று ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது  அந்த விசாரணையின் முன்னேற்ற விவரங்களை ஒரு ஊடகவியலாளர் என்னிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டு செய்தி எழுத முயன்றார்.

இதனை ஒரு ஊடக ஒழுக்கமாகக் கருத முடியாது. உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு மக்களைக் குழப்பத்திலாழ்த்தும் ஊடகவியலாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் ஒரு போதும் தயங்காது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X