Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 31 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம், எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன், கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆவது நினைவுதினம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தால் இன்று (31) அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஊடகவியலாளர் நடேசனின் 16ஆவது நினைவுதினத்தை குறிக்கும் வகையில் 16 ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செய்யப்பட்டதுடன், இரண்டு நிமிடங்கள் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
2004ஆம்ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி, தனது அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது, மட்டக்களப்பு, எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .