2025 மே 15, வியாழக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட, ஊடகவியலாளர்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களம் எதிர்வரும் சனிக்கிழமை (27) காலை செயலமர்வொன்றை நடாத்தவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் நிர்வாகத்துக்கான பணிப்பாளர் நிர்மலீ பிரியங்கனி குமாரகே அறிவித்துள்ளார்.

இச் செயலமர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு முறையாக தெளிவுபடுத்துவதே இந்த செயலமர்வின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, ஊடகத்துறை ஆற்றலையும் மேம்படுத்தும் நோக்கிலான சிறந்த உரைகளும் இங்கு இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .