2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரால், ஊடகவியலாளர் முகமட் சஜீக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது எனக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், காத்தான்குடியில் ஆர்ப்பாட்டமொன்று, நேற்று (27) மாலை முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில், காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு முன்பாக, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

“ஊடக அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்”, “ஊடகவியலாளர் சஜீ மீதான கொலை அச்சுறுத்தலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்”, “போதைவஸ்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபடுவோம்” போன்ற பாதாதைகளை ஏந்தி, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, ஊடக சுதந்திரத்திரத்தை வலியுறுத்தும் வகையிலான கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், போதைப்பொருளுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X