Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, கல்குடாவில், எதனோல் மதுபானத் தொழிற்சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு, வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு, வாழைச்சேனை நீதிமன்றில் இன்று (17) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நான்காவது சாட்சியான ஏறாவூர்ப் பொலிஸார் மன்றுக்குச் சமுகமளிக்காத காரணத்தால், இதன்போது வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தித் தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவர், இதன்போது நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குறித்த தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது, இவ்வாண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி, மதுபானசாலை உற்பத்தி நிலையத்திலுள்ள சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய செய்தியாளர்களான புண்ணியமூர்த்தி சசிகரன், நல்லதம்பி நித்தியானந்தன் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.
மதுபானசாலை உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற இடத்திலிருந்த சிலர், ஊடகவியலாளர்களைத் தாக்கியதுடன், சுமார் 6 கிலோமீற்றர் வரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து, அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு முயன்றிருந்தனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago