Freelancer / 2025 ஜனவரி 31 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் நேற்று (30) மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் ஊடகவியலாளர்கள் தீப்பந்த ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டு.ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இணைந்து ஏற்பாட்டினையடுத்து அங்கு மாலை 5.00 மணிக்கு ஒன்றினைந்த ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நினைவுதூபியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தீப்பந்தம் ஏற்றி சுமாhர் ஒருமணித்தியாலம் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். R





8 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025