Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 29 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு- கல்குடா, கும்புறுமூலை வேம்புப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் எதனோல் தொழில்சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று(28), வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதி வாதிகள் இருவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
வழக்கின்போது, மன்றுக்கு வழங்கப்பட்ட அறிக்கை பிழையானது என தீதிபதி பொலிசாருக்கு குறிப்பட்டிருந்தார்.
ஏற்கனவே கல்குடா பொலிசாரினால் வழங்கப்பட்ட அறிக்கை மூன்று தடவை பிழையானதென நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையிலும், இம்முறையும் அறிக்கையை மன்றுக்கு பொலிசார் வழங்கப்பட்டிருந்தது.
பல தடவை குறித்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பாக அறிக்கை பிழையான முறையில் மன்றுக்கு வழங்கப்பட்டபோதும் திருத்துவதற்கு பல தடவை கல்குடா பொலிசார் மன்றில் கால அவகாசம் கோரியிருந்த நிலையில் நேற்றைய வழக்கின்போதும் பிழையென நீதிபதி ஏ.சி.ரிஸ்வி தெரிவித்தபோதும், வழமைபோன்று அறிக்கை திருத்தி வழங்குவதற்கு கல்குடா பொலிஸ் கால அவகாசம் கேட்டபோது, அறிக்கை திருத்தி வழங்குவதற்குரிய இறுதி காலம் இன்று என்பதால் கால அவகாசம் வழங்க முடியாது என பொலிசாரின் கால அவகாச கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.
எனினும் குறித்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்குடன் கல்குடா பொலிசார் செயற்படுகின்றனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதவான் இதன்போது கூறியுள்ளார்.
முறைப்பாட்டாளரிடம் குறித்த வழக்கு தொடர்பாக சமாதானத்திற்கு வருகின்றீர்களா என நீதிபதி கேட்டபோதும் முறைப்பாட்டாளர் அதற்கு மறுப்பு தெரிவிதுள்ளார்.
இதன்போது தாக்குதல் சம்பவம் தொடர்பில் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் விதம் குறித்து பொலிசாருக்கு நீதவானால் அறிவுறுத்தப்பட்டதுடன், எதிர்வரும் ஜூலை 09 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வழக்கு விளக்கமளிப்பு நடைபெறும் என நீதவான் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago