2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஊரடங்கில் சட்டவிரோதங்கள்; மதனமோதகங்கள் கைப்பற்று

Editorial   / 2020 மார்ச் 29 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - இருதயபுரம் மேற்குப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை, இன்று (29) முற்றுகையிட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள், வீடொன்றிலிருந்து ஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களம் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ்,  மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது. இதன்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், கசிப்பு உற்பத்தி நிலையத்தின் உரிமையாளர் தப்பிச்சென்றிருந்தார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கசிப்பு உற்பத்தி நிலைய உரிமையாளரின் வீட்டில் மதுவரித் திணைக்களத்தால் சோதனை நடத்தப்பட்டது.

குறித்த உரிமையாளரின் வீட்டின் முற்றத்திலும் வீட்டின் பின் பகுதியிலும் குழிகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 53 அவின் பக்கெட்டுகள் மீட்கப்பட்டன.

குறித்த 53 அவன் பக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 1,325 மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகளைகள் மீட்கப்பட்டனவென, மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் பிரதான பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X