Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கனகராசா சரவணன் / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில், நாளை (09) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில், அத்தியாவசியக் கடைகளைத் திறப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்துக் கடைகளையும், மறுஅறிவித்தல் வரை பூட்டுமாறு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா, சகல பிரதேசச் செயலாளர்களுக்கும், இன்று (08) பணிப்புரை விடுத்துள்ளார்.
மாவட்டத்தில், நாளை வியாழக்கிழமை காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
இதன்போது, சன நெரிசல்களைத் தடுப்பதற்கும் சமூக இடைவெளியைப் பேணுவதற்காகவுமே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் அறிவித்துள்ளார்.
இதற்கமைவாக, வங்கிகள், மருந்தகங்கள், பலசரக்குக் கடைகள், உணவு, அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை நிலையங்களைத் தவிர, ஏனைய அனைத்துக் கடைகளையும் மறுஅறிவித்தல் வரை பூட்டுமாறும் அதனை மீறித் திறக்கப்படும் கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகளை அவர் பணித்துள்ளார்.
அதற்கு பொலிஸார், இராணுவத்தினரின் பங்களிப்பைப் பெற்றுச் செயற்படுமாறு, மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர்களுக்கும், மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
26 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
3 hours ago