2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’எங்கள் வாக்கு எங்கள் எதிர்காலம்’

Editorial   / 2017 ஜூலை 03 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், டி.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஊர்வலமொன்று, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், மட்டக்களப்பில் இன்று  (03) இடம்பெற்றது.

பஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமான இவ்வூர்வலம், மட்டக்களப்பு நகரை ஊடறுத்து, தேர்தல்கள் அலுவலகம் வரைச் சென்றது. 'எங்கள் வாக்கு எங்கள் எதிர்காலம்', 'வாக்காளர்களே அரசர்கள்', 'ஜூன் மாதம் வாக்காளர் உரிமைகளைப் பதிவு செய்து உறுதிப்படுத்தும் மாதம்' போன்ற வாசகங்கள்  அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு, ஊர்வலத்தில் பங்கேற்றியோர் பயணித்தனர்.

இதில், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் எச்.ஹுல், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் சரோஜினிதேவி சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் ஆர்.சசீலன் உட்பட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு தேர்தல்கள் உதவி ஆணையாளர் மற்றும் அலுலர்களால், இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, வாக்காளர் உரிமையை வலியுறுத்தும் வகையிலான வீதி நாடகமும் விசேட உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X