Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
'எடுத்தேன் - கவிழ்த்தேன்' என்று உசார் மடையர்களாகி அரசியல் செய்வது பாதிக்கப்பட்டுப் போயுள்ள சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஒருபோதும் விமோசனம் பெற்றுத் தராதென, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
சமகால அரசியலில் முன்னெடுக்கப்பட வேண்டிய தூரநோக்குச் சிந்தனைகள் பற்றி, இன்று (21) அவர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,
“சிறுபான்மைச் சமூகங்களான தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாய்ச் செயற்பட்டு, ஒருமித்து உரிமைகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக பல சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல்கள் சூட்சுமமான முறையில் கையாளப்பட்டு வருவதை தூரநோக்குச் சிந்தனையாளர்கள் உற்றுக் கவனித்துப் பார்க்க வேண்டும்.
“கடந்த கால யுத்தத்தால் சிறுபான்மை இனங்கள் திட்டமிட்டு, வேண்டுமென்று சீரழிக்கப்பட்டன.
“இப்பொழுது யுத்தம் முடிவடைந்த பின்னரும் இவ்விரு சிறுபான்மைச் சமூகங்களையும் முட்டி மோதவிட்டு சின்னாபின்னமாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனங்களுக்கு எரியும் நெருப்பாக எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அதேநேரம், இந்தப் பிரச்சினைகளில் இன்னும் இன்னும் எண்ணெய் வார்த்து எரிய வைப்பதற்கு எத்தனையோ குழப்பவாதிகள் திட்டம் வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
“இப்பொழுது திடீரென நமக்காகப் பரிந்து பேச எத்தனிக்கும் நபர்களின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஏன் இவ்வளவு ஆர்வமாகவுள்ளார்கள் என்பது பற்றியும் நாம் கவனமாகச் சிந்திக்க வேண்டும். நிதானமில்லாத ஆர்ப்பரிப்புகளால் அழிவுகள்தான் மிஞ்சும்.
“ஆயுதப்போராட்டச் சக்தி மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் பலமான ஜனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. அந்த சக்தியை நேரடியாகவும் மறைமுகமாகவும் பலவீனப்படுத்துவதற்காக பல கெடுபிடிகளும் நெருக்கடிகளும் தரப்படுகின்றன.
“பேரினவாத சமூகத்தின் மத்தியில் வாழும் தமிழர்களும், முஸ்லிம்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் ஐக்கியப்படுவதற்கு பல தடைகள் கையாளப்படுகின்றன.
“பேரினவாதிகளையும், அவர்களது எடுபிடி முகவர்களையும் இனங்கண்டு அவர்களது சதிவலையிற் சிக்காமல் சிறுபான்மை இனங்கள் வெற்றியடைய வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago