Suganthini Ratnam / 2017 ஜனவரி 12 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அரசியல் அமைப்பு மாற்றம், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு விவகாரம், எல்லை மீள்நிர்ணயம் உட்பட பல்வேறு மாற்றங்களுக்கான நகர்வை நோக்கிச் சமகால அரசியல் சென்று கொண்டிருப்பதால், சிவில் சமூகமானது எதிர்காலத்தில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் எனத் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர்.மனோகரன் தெரிவித்தார்.
மாவட்ட சர்வ மதப் பேரவையின் மாதாந்த ஒன்றுகூடலும் 'பல்விதச் செயற்பாடுகளின் ஊடாக மோதல் நிலைமாற்றத்துக்கான முன்னெடுப்பு' எனும் தலைப்பிலான செயலமர்வு, கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் இன்று (12) நடைபெற்றது.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'அரசியல் மாற்றங்கள் ஏற்படும்போது, அதன் விளைவாக உருவாகும் முரண்பாடுகளைச் சாதகமான முறையில் முறியடிப்பதற்கு இப்போதிருந்தே சிவில் சமூகங்கள் தங்களைத் தயார்ப்படுத்த வேண்டும்.
கடந்த காலத்தில் சிவில் சமூகம் தங்களைத் தயார்ப்படுத்தாமல்; இருந்ததால், ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்.
குறிப்பாக, சக சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தூண்டி விடப்படும்பொழுது, அதனால் உள்ளூர் சமூகங்களே அதிகமாகப்; பாதிக்கப்பட்டன. அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது' என்றார்.
'கடந்த யுத்த கால இழப்பு அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பயன்மிக்க, பெறுமதி மிக்க அனுபவங்களின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளை சிவில் சமூகம் ஆக்கவூர்வமாகக் கையாள்வதற்கு வழிவகை கண்டாக வேண்டியது காலத்தின் தேவையாகும்.
குறிப்பாக, இந்த விடயத்தில் மதத் தலைவர்கள் சிறந்த மத விழுமியக் கொள்கைகளை கடைப்பிடிப்பதற்கு மக்களைத் தயார்ப்படுத்துவதுடன், வன்முறையற்ற சகிப்புத் தன்மையுடனான வாழ்க்கை வழிமுறைகளையும் கடைப்பிடித்து ஒழுவதற்குத் தயார்ப்படுத்த வேண்டும்.
இனங்களுக்கு இடையில் இணக்கப்பாட்டைக் கொண்டுவருவதற்குச் சர்வமத செயற்பாட்டாளர்கள் சிறந்த பங்காற்ற முடியும்' என்றார்.
7 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago