Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான் அரசாங்கத்துடன் இருப்பதால் அரசியலைப் பயன்படுத்தி, பலகோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்திகளைச் செய்து முடிக்கின்றேன். எனினும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் இதனைச் செய்ய முடியாதென, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
வவுணதீவு பிரதேசத்திலுள்ள இலுப்படிச்சேனை கிராமத்தில் தையல் பயிற்சி நிலையத்தை நேற்று (26) ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், வவுணதீவு பிரதேசத்தில் மாத்திரம் இவ்வருடத்தில், எமது அமைச்சின் ஊடாக சுமார் 35 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, தையல் பயிற்சி நிலையங்களுக்கான தையல் இயந்திரங்கள் பொற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
நான் ஓர் எதிர்கட்சி வரிசையிலே இருந்தேன் என்றால், உங்கள் முன்னால் பேச முடியாது, இங்கு இவ்வளவு மக்கள் கூட்டம் வந்திராது, உங்களுக்கு இவ்வாறான உதவிகளைச் செய்ய முடியாது. அபிவிருத்திகளோ, உதவிகளோ ஏதாவது செய்யவேண்டுமானால், அதை அரசாங்கத்திலிருந்துதான் சாதிக்க முடியுமென்றார்.
அது சிங்கள கட்சியாக இருக்கலாம், தமிழ் கட்சியாக இருக்கலாம் அல்லது முஸ்லிம் கட்சியாக இருக்கலாம். வெறுமனே உரிமை பேசி கதைத்துக்கொண்டிருப்பதில் எந்த அர்த்தமுமில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்தெனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்தி, அவர்களை குடும்ப வருமானம், சுகாதாரம், கல்வி உட்பட சகல துறைகளிலும் முன்னேற்றம் பெறச் செய்யும் நோக்குடன், தமது அமைச்சு அயராது உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதில் இன, மத பாகுபாடின்றி மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பல கோடிக்கணக்கான அரச நிதியை நாம் செலவு செய்து வருகின்றோமென்றார்.
3 hours ago
3 hours ago
7 hours ago
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago
27 Aug 2025