Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டிடப்போகின்ற எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இம்முறை 50 சதவிகித வாக்கைப் பெறப்போவதில்லையென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் கூறினார்.
இது தொடர்பாக இன்று (20) அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிறுபான்மை மக்களின் வாக்குகளே அடுத்த ஜனாதிபதி யார் என்பதை உறுதி செய்யப்போன்றது எனக் குறிப்பிட்ட அவர், இலங்கை முஸ்லிம் சமூகம் தமது ஜனநாயக வாக்குப் பலம் எத்தகையது என்பதைக் வெளிக்காட்டும் விதத்தில் ஜனாதிபதி வேட்பாளராக முஸ்லிம் ஒருவரை நிறுத்தி, அவருக்கு ஒட்டுமொத்தமாக தமது முதலாவது வாக்கை அளிக்க வேண்டுமென்றார்.
அந்த வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் இதில் களமிறங்குவாரானால் அது சிறப்பாக இருக்கும் என்றும் இரண்டாவது வாக்கை, முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு உத்தரவாதம் அளிக்கும் வேறொரு வேட்பாளருக்கு வழங்கவேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago