Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்த தனது பெயரை நீக்கியதன் மூலம் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவித்த அவர், 'மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்த எனது பெயரை நீக்கிவிட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை நியமித்துள்ளமை மோசடியாகும்.
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி தொடர்பான புதிய கொள்கையின் அடிப்படையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அதேவேளை, அமைச்சுப் பதவிகளையோ அல்லது வேறேதும் பதவிகளையோ வகிக்காத நாடாளுமன்ற உறுப்பினருக்கே அந்தந்த மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். அதன் பிரகாரம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அதேவேளை, அரசாங்கத்தில் எந்தவித பதவிகளையும் வகிக்காத ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எனது பெயரே முன்மொழியப்பட்டிருந்தது.
ஆயினும், எனது பெயரை சூட்சுமமாக நீக்கிவிட்டு தனது கட்சியைச் சேர்;ந்த பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் பெயரைப்; பட்டியலில் சேர்த்து பதவி கொடுத்து பெருமை தேடிக்கொண்டுள்ளார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன். மற்றொருவரின் பதவியைத்; தட்டிப் பறிக்கும் இச்செயல் அப்பட்டமான ஒரு மோசடியாகும்' என்றார்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025