Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 20 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் அரசாசங்கம் வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிற பிரேரணையைத் தான் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்ததாகவும் அப்பிரேரணையானது, நாடாளுமன்றத்தின் பெப்ரவரி மாத ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், நேற்று செவ்வாய்கிழமை (19) தனது பதிவியை இராஜினாமாச் செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தெரிவித்தார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தது தொடர்பாக தமிழ்மிரருக்கு சற்று முன்னர் அலைபேசியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் பதவியில் இருந்த நான்கு மாதங்களில் இரண்டு முக்கியமாக பிரேரணைகளை முன்வைத்திருந்தேன். முதலாவது, பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கம் இலவசமாக வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்கிற பிரேரணையாகும். மற்றையது, ஆசிரியர்களும் பாடசாலைகளிலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களும் தமது கடமை நேரத்தில் தொலைபேசியில் உரையாடுவதற்குத் தடை விதிக்கும் பிரேரணையாகும்.
மேற்படி இரண்டு பிரேரணைகளும் பெப்ரவரி மாத ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்ததோடு, விவாதத்துக்கும் எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. இந்த நிலையில்தான் நான் ராஜினாமாச் செய்துள்ளேன். இதனால், குறித்த பிரேரணைகள் விவாதத்துக்கு வரமாட்டாது.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் இல்லாத சில மாவட்டங்கள் உள்ளன. அந்தப் பகுதிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் எனும் அடிப்படையில்தான் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பதவியை நான் ராஜினாமாச் செய்தேன்.
நம்பிக்கைப் பொறுப்பின் அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, நான் வெறுமனே வைத்துக் கொண்டிருக்கவில்லை. இந்தக் குறுகிய காலத்துக்குள் முடிந்தளவு சமூகத்துக்காக சபையில் பேசியுள்ளேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago