Simrith / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பிரயாணித்த வாகனம் களுவாங்சிக்குடி பிரதேசத்தில் கார் ஒன்றுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் மோதி விபத்துக்குள்ளானதில் பாராளுமன்ற உறுப்பினர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை ஆலையடிவேம்பில் இன்று இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டத்திற்கு சம்பவ தினமான இன்று காலை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டுவிட்டு மட்டக்களப்பை நோக்கி பிற்பகல் 4.00 மணியளவில் வாகனத்தில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அருகில் கார் ஒன்று பாராளுமன்ற உறுப்பினரது வாகனத்துடன் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பிரயாணித்த பாராளுமன்ற உறுப்பினரது கை தோள்பட்டையை விட்டு விலகி படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை இடம்பெற்றுவருகின்றது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கனகராசா சரவணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .