2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 29 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

அம்பாறை, திருக்கோலில் பிரதேசத்தில் தீயில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம், இன்று (29) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விநாயகபுரம் 3 பிரிவு, காளிகோவில் வீதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துச்சாமி கருப்பாயி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந்தப் பெண்ணுக்கு சிறுநீராகம் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு நோய்களால் வேதனைகளை அனுபவித்து வந்துள்ளதாகவும் மன விரத்தியின் காரணமாக அவர் தனக்குத் தானே தீயிட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

சடலம், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவுள்ள பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கபடுமென பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X