2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

எரிபொருளினைப் பெற்றுக் கொடுக்க விசேட வேலைத்திட்டம்

Freelancer   / 2022 ஜூன் 28 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மத்தியில் மட்டக்களப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையினைப் பாதிக்காத வகையில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்து வருகின்றார்.

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் அத்தியாவசிய தேவையான சுகாதார சேவைகள் தடையின்றி மட்டக்களப்பு மக்களுக்கு வழங்கப்படுவதற்குரிய நடவடிக்கைகளை சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டுள்ளதுடன், சுகாதாரத்துறையினருக்கான எரிபொருளினை தடையின்றி வழங்குவதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் துறைசார் அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதரா நெருக்கடியான சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  சுகாதாரத்துறையின் சேவைகளை  தடையின்றி மக்களுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையில் பணிபுரிபவர்களுக்கு தடையின்றி எரிபொருளிளை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையினூடாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளன.

சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் இடம்பெற்ற இவ்விசேட கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி கே.கலாரஞ்சனி,  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் க. சுகுணன், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தேவப்பிரிய எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .