2025 மே 10, சனிக்கிழமை

ஏப். 21 பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு உதவித்தொகை

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, அப்துல்சலாம் யாசீம்

ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு, உதவித்தொகை வழங்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தலைமையில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களக் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஊழியர்கள்  நலன்புரிச் சங்கத்தின் (வெஸ்லோ) சமூக நலன் திட்டத்தின் கீழ், 2 மில்லியன் ரூபாய் நிதி சேகரிக்கப்பட்டு, சியோன் தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட, பெற்றோர்களை இழந்த 13 சிறார்களுக்கு, அவர்களின் வயதுகளுக்கேற்ப அப்பணத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக, சங்கத்தின் தலைவி கே. கலாமதி பத்மராஜா  தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா, கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X