Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,பேரின்பராஜா சபேஷ்
ஏறாவூர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சந்தேக நபர்கள் ஆறு பேரும் இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 05ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 சந்தேக நபர்களும் நீதவான் எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணினது கணவரின் சகோதரன் ஏற்கெனவே 14 நாட்கள் விளக்கமறியலில் இருந்த நிலையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago