2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கடந்த செப்ரெம்பெர் மாதம் 11ஆம் திகதி ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட  சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஆறு பேரினதும் இரத்த மாதிரிகள் விஞ்ஞான ரீதியான உறுதிப்படுத்தலுக்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி  முன்னிலையில் புதன்கிழமை (05,) ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.பி. தயானந்த ஆகியோர் சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகளை ஒப்படைத்தனர்;.

இம்மாதிரிகளை உடனடியாக இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பிவைக்க நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்  கடந்த 11.09.2016 அன்று பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன. கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் நகைகளும்  திருடப்பட்டிருந்தன.

இதேவேளை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புட்ட 17 வகையான சான்றுப் பொருட்கள் விஞ்ஞான ரீதியான உறுதிப்படுத்தலுக்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு ஏற்கெனவே  அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.
பொலிஸார் மற்றும், மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் ஆகியோரால் 17 சான்றுப் பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்;தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X