2025 மே 10, சனிக்கிழமை

ஏறாவூர்ப்பற்றில் 5,000 வறிய மாணவர்கள்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 17 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 39 கிராம அலுவலகப் பிரிவுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் சுமார் 5,000 மாணவர்கள் உள்ளதாக ஏறாவூர்ப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன் தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பற்று மத்தியஸ்த சபையின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'கற்றலுக்குக் கைகொடுப்போம்' என்ற திட்டத்தினூடாக பிரதேச செயலக அலுவலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அன்பளிப்புகளினால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள  மாணவர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படுகின்றன.

அதற்கும் மேலதிகமாக, இப்பகுதியில் செயற்படும் மத்தியஸ்த சபையும் இந்த மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியதெனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X