Princiya Dixci / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூரில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவத்தின் பின்னர் சி.சி.டி.வி கண்காணிப்புக் கமெராக்களை வீடுகளிலும் கடைகளிலும் பொருத்தும் ஆர்வம் அதிரித்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிக நுட்பமாக நடக்கும் திருட்டு மற்றும் கொலை நிகழ்வுகளை, கண்காணிப்புக் கமெராக்கள் பதிந்து வைத்துக் கொள்ளும் என்பதால் பொதுமக்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏறாவூர் கொலைச் சம்பவத்தில் இரு வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெராக்களில், நபரொருவர், மோட்டார் சைக்கிளில் நடமாடித் திரிவது அவதானிக்கப்பட்டு, அதுவே சந்தேகநபர்களைக் கைதுசெய்ய முக்கிய திருப்பமாக அமைந்திருந்தது.
இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று ஒரு மாத காலத்தில் ஏறாவூர் நகரில் சுமார் 20இற்கு மேற்பட்ட சி.சி.டி.வி கண்காணிப்புக் கமெராக்கள், வீடுகளில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளதாக கமெரா பொருத்துநர்கள் தெரிவித்தனர். அதேவேளை, தொடர்ந்தும் வேண்டுகோள்கள் வந்த வண்ணம் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
கண்காணிப்புக் கமெராக்கள், திருடர்களுக்கும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்கும் என்பதால் இந்த விடயத்தில் பொதுமக்களை, அக்கறை காட்டுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago