2025 மே 10, சனிக்கிழமை

ஏறாவூரில் 50 குடும்பங்களுக்கு வீடுகள்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 19 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள அப்துல் மஜீத் மாவத்தையில் 04 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் 50 வீடுகள்  முதற்கட்டமாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைரின் ஊடக இணைப்பாளர் எம்.எப்.இஸ்ஸடீன், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற 500 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படவுள்ளன. இந்நிலையில், முதலில் காணி இன்றியுள்ள 50 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு இக்குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும்  04 பரப்புடைய காணியை வழங்கி அக்காணிகளில் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
சிறிலங்கா ஹிறா பவுண்டேஷனின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த வீடுகள் ஒவ்வொன்றும்  சமையல் அறை, குளியல் அறை, படுக்கை அறை, வரவேற்பு அறை ஆகியவற்றைக் கொண்டதாக அமையும்.  ஒவ்வொன்றும்  8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படுவதாகவும் அவர் கூறினர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைரின் வேண்டுகோளுக்கமைய மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும்,

இந்த வீடுகளுக்கான நிர்மாணப்பணி ஓரிரு மாதங்களில்; பூர்த்தியாக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு 500 பேரில் காணி உள்ளவர்களுக்கு அவர்களின் காணிகளில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X