2025 மே 08, வியாழக்கிழமை

ஏறாவூரில் சூறைக்காற்று : மரங்கள் சரிவு

Niroshini   / 2015 நவம்பர் 30 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு,ஏறாவூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(29) இரவு வீசிய சூறைக் காற்றுக் காரணமாக மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.

சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

மேலும்,மரங்கள் மின்கம்பங்களில் சரிந்து வீழ்ந்ததால் சில மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, இன்று திங்கட்கிழமை காலை ஏறாவூர் நகர சபைப் பிரிவில் வீதிக்குக் குறுக்கே சரிந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தியதாக ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X