ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மே 07 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் நகரில், புதிய வர்த்தகர் சங்கம் தெரிவுசெய்யப்பட்டு, நேற்று (06) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதென, ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கத்தின் புதிய நிர்வாகச் செயலாளர் அப்துல் றஸாக் முஹம்மத் ஆஸிக் தெரித்தார்.
ஏறாவூர், நகர வர்த்தகர் சங்க புதிய நிர்வாகத்தின் தலைவராக, செய்னுலாப்தீன் ஆலிம் முஹம்மத் இனாயத்துல்லாஹ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன்; உப தலைவராக எம்.ஐ.எம். றியாழ்; உப செயலாளராக எல்.பி. முனவ்வர்; பொருளாளராக எச்.எம்.எம். ஜஸாலி ஆகியோரோடு, 15 பேர் கொண்ட நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல சமூகங்களும் ஒன்றுசேரும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும், இலாபகரமான வர்த்தக நகராகவும் பெயர்பெற்ற ஏறாவூரை, மேலும் சிறப்பான வாடிக்கையாளர் சேவை நலனோம்பு இடமாகவும் நம்பிக்கையான வர்த்தக நகராகவும் மாற்றும் திட்டங்களைத் தாம் முன்னெடுக்கவுள்ளதாக, ஏறாவூர் நகர வர்த்தகர் சங்க புதிய நிர்வாகத்தின் தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் முஹம்மத் இனாயத்துல்லாஹ் தெரிவித்தார்.
4 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
22 Dec 2025