Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 27 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
“றெட் ஏஞ்சல்” என அழைக்கப்படும் ஒரு வகை மாதுளம் பழச் செய்கை ஏறாவூரில் வெற்றியளித்திருப்பதாக, ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவு விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
ஏறாவூர், சத்தாம் ஹூஸைன் கிராமத்தைச் சேர்ந்த அல்லாபிச்சை ஹக்கீம் என்பவரின் தோட்டத்தில் பரீட்சார்த்தமாக செய்கை பண்ணப்பட்ட இந்த வகை மாதுளைச் செய்கையின் அறுவடை நிகழ்வு, நேற்று (26) நடைபெற்றது.
இந்நிகழ்வி,ல் மட்டக்களப்பு விவசாய பிரதிப் பணிப்பாளர் வி. பேரின்பராஜா, வடமாகாண விவசாய நவீன திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் கே. பத்மநாதன், ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவு விவசாயப் போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன், விவசாயப் பயிலுநர் ஜே. ஜெனிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அங்கு புதிய வகை செந்தேவதை மாதுளம் பழச் செய்கை பற்றி மேலும் தெரிவித்த விவசாயப் போதனாசிரியை முர்ஷிதா ஷிரீன், “இந்திய மாதுளம் பழங்களின் இனமான இது விதையற்றதும் செந்நிறமானதுமாகும். இவ்வினம் கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக ஏறாவூரில் பரீட்சார்த்த செய்கைக்குட்படுத்தப்பட்டது.
“இந்த மாதுளை இனம் நடுகை செய்யப்பட்டு, சுமார் 9 மாதங்களில் பூக்கத் துவங்கி ஒரு வருட காலத்துகச்குள் கனிகளைத் தரும். சாதாரணமாக இந்த வகை மாதுளம்பழத்தின் தற்போதைய சந்தை விலை 350 தொடக்கம் 400 ரூபாயாக உள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .