2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஏறாவூரில் வர்த்தகர் கழுத்தறுத்துக் கொலை

Freelancer   / 2024 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம். பர்ஸான்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்நகர் - ஹிஸ்புல்லாஹ் நகரில் வர்த்தகர் ஒருவர் நேற்றிரவு (6) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் வர்த்தக நிலையத்தை கொள்ளையடிக்க வந்த நிலையில்தான் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் திருமணம் முடிக்காத நிலையில் கடை நடாத்தி வந்த 45 வயதுடைய தாவூத் என்பவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஏறாவூர் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .