ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிர்மாணிக்கப்பட்டுவரும் ஏறாவூர் நவீன பொதுச் சந்தை, வியாபார நடவடிக்கைகளுக்காக, அடுத்தாண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டு வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் கையளிக்கப்பதற்கான துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர், பொதுச் சந்தையின் நிர்மாணப் பணிகள் குறித்த முன்னேற்றங்களைத் தெளிவுபடுத்துமாறு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகள், கொழும்பு தாருஸ்ஸலாம் அலுவலகத்துக்கு நேற்று (23) பிற்பகல் வருகை தந்து முன்னேற்றங்கள் குறித்து விவரங்களைத் தெரிவித்தனர்.
இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன பிரதிப் பொது முகாமையாளர் பிரியானி கரவிட்ட, நிர்மாணப் பகுதிக்கான முகாமையாளர் எஸ்.ரி.பி. அழககோன், நிர்வாக முகாமையாளர் சந்திமா ஹேரத், இணைப்புச் செயலாளர் ஏ.ஆர்.எம். ரஸ்மின் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன பிரதிப் பொது முகாமையாளர், நிர்மாணிக்கப்பட்டுள்ள ஏறாவூர் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் கீழ்த் தளத்தில் மின்சாரம், மலசல கூட வசதி உட்பட சுருள் கதவு போன்ற இணைப்பு வேலைகள் மாத்திரம் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளன என்றார்.
இதேவேளை, இதற்கெனத் தேவைப்பட்ட 19 மில்லியன் ரூபாயை உடனடியாக விடுவிக்க நகரத் திட்டமிடல் அமைச்சும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago