2025 ஜூலை 23, புதன்கிழமை

ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள கட்டடங்களை உடைப்பதற்கு கால அவகாசம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர சபைப் பிரிவிலுள்ள ஏறாவூர் பிரதான வீதியை அகலமாக்கும் திட்டத்துக்காக, ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள வீடுகள், கடைகள், பாடசாலைகள் உள்ளடங்களான 750 கட்டடங்களை உடைப்பதற்கு, எதிர்வரும் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.

அவ்வீதியிலுள்ள கட்டட உரிமையாளர்களுக்கு, இது தொடர்பான நினைவூட்டல் கடிதங்கள், ஏறாவூர் நகர சபையால் இன்று (02) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கேட்டுக்கொண்டதன் படி, இதுவரையில் 7 வர்த்தக நிலையங்கள், 3 வீடுகள், ஒரு பாடசாலைக் கட்டடம் என்பன உடைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, 31ஆம் திகதிக்கு முன்னர் அடையாளப்படுத்தப்பட்ட கட்டடங்களை உடைத்து, ஏறாவூர் பிரதான வீதியை அகலமாக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, ஏறாவூர் நகர சபை செயலாளர் கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .